செவ்வாய், 14 ஜனவரி, 2025

பொங்கல் வாழ்த்துக்கள்

எனது இனிய அன்பிற்கு உரியவர்களே!!!

 பொங்கல் பானையும் பொங்கட்டும், உங்கள் உள்ளமும் ஆனந்தத்தில் பொங்கட்டும்  அனைவரின் 
இல்லமும் மகிழ்ச்சியில் பொங்கட்டும் 
தை திங்கள் முதலாம் நாளில் வாழ்க வாழ்க என்று உங்கள் எல்லோரையும் வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

சிவா
நிறுவனர், தலைவர் 
தாயுமானவர் ஞான சபை 

வெள்ளி, 10 ஜனவரி, 2025

தன்னை அறியும் கல்வியே கல்வி ஆகும்.

"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே'' (திரு.355)

""என்னையே நானறிய இருவினையும் ஈடழித்துத்
தன்னை அறியத் தலம் எனக்குச் சொன்னான்டி''
(பட்டினத்தார், அருள் புலம்பல்,22)

நீங்கள் அடுத்தவர் மனதில் எப்படி உணரப்படுகிறீர்கள்.என்பதை விடுத்து உங்கள் மனதால் உங்களைப் பற்றி என்ன அறிந்து புரிந்து கொள்கிறீர்களோ அதுதான் முதலில் தன்னையறிவது.

ஒரு மாணவன் இவ்வாறு தேர்ச்சி பெற்று வரும்பொழுது தான் குருநாதர் தன்னைத் தானே மேலும் சூட்சுமமாக அறிந்து கொள்ளும் பயிற்சிகள் கொடுத்து பக்குவப்படுத்தி தன்னைத் தானே அர்ச்சனை செய்து கொள்ளும் அளவுக்கு வளர்த்தெடுப்பார்.

சு.சிவா
நிறுவனர், தலைவர் 
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை

மெய்ஞானம் என்னவாகும்?

 சாத்தான் மற்றும் குட்டி பிசாசு பேசிக் கொள்ளும் ஒரு குட்டி கதை.

சாத்தானிடம் வேலை பார்க்கும் ஒரு குட்டிப்பிசாசு சாத்தானைப் பார்க்க அரக்க பரக்க ஓடி வந்தது.
பயத்தால் நடுங்கியபடி சாத்தானைப் பார்த்து பேச ஆரம்பித்தது.

ஆபத்து, ஆபத்து,,, உடனே நாம் ஏதாவது செய்தேயாக வேண்டும். இல்லாவிட்டால் இந்த உலகத்தில் தீமையே அழிந்துவிடும். 

பின் நாமும் அழிந்து விடுவோம்.
குட்டிப்பிசாசே,,, முதலில் விஷயத்தைச் சொல் 

பூலோகத்தில் ஒரு மனிதன் அடிப்படை உண்மைகளை கண்டுபிடித்து விட்டானாம். 

அதனை அவன் எல்லோரிடமும் சொல்லி விடுவான். எல்லோருக்கும் உண்மை தெரிந்து விட்டால் அன்பு பெருகும். 

தீமை அழிந்துவிடும். பின் நமக்கென்ன வேலை?"

சாத்தான் கட கடவென்று சிரித்தது.
முட்டாள் பிசாசே,,, முதலில் உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொள். 

முட்டான் தனமாக பேசாதே. விஷயம் எனக்கும் தெரியும். நமது ஆட்களை நான் ஏற்கனவே அனுப்பி விட்டேன். 

இனிமேல் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். கவலைப்படாதே,,,, தீமை என்றும் அழியாது

 ஆனால்  நான் அங்கிருந்துதானே நேரே இங்கே ஓடி வருகிறேன். அங்கே நமது ஆட்களை பார்க்கவில்லையே 
அந்த உண்மையைக் கண்டு பிடித்தவனைச் சுற்றி அறிஞர்கள், தத்துவஞானிகள், பண்டிதர்கள், பூசாரிகள், பாதிரியார்கள் . மதகுருமார்கள் நின்று கொண்டிருப்பார்களே? அவர்கள் எல்லாம் நமது ஆட்கள்

அதனால் நீ எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்.
இந்த மேதாவிகள் போடும் வாய்ச் சண்டையில் இவர்களுடைய வாதங்கள், பிரதிவாதங்களில், இவர்கள் அடிக்கும் கூத்தில் உண்மை துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விடும்.

இவர்கள் மூலமாகத்தான் நான் என் ரகசிய வேலையைச் செய்கிறேன்

 அவர்கள் என்னுடைய ரகசிய பிரதிநிதிகள். என்னுடைய உளவாளிகள்.
நான் போனாலும் மாறுவேடத்தில் தான் போவேன்

இவர்கள் அடிக்கும் கூத்தில் அந்த ஞானியால் ஒன்றும் செய்ய முடியாது. அவனுக்கும் வயதாகிவிட்டது அவன் காலம் முடிந்துவிடும்.

அதன் பின் என் ஆட்கள் அந்த ஞானியின் சீடர்களாக, அவனது பிரதிநிதிகளாக, அவனது தூதர்களாக தங்களை அறிவித்துக் கொண்டு அவன் பெயரால் ஒரு மதத்தை தொடங்கி அவன் கண்டுபிடித்த மெய்ஞானத்தை பூண்டோடு அழித்து விடுவார்கள்.

கருத்து. 

சாத்தானும் குட்டி பிசாசு மாயை மயக்கத்தில் இருக்கிறது என்பது ஞானிக்கு தெரியாமலா இருக்கும்.

ஞானி என்பவர் அனைத்தையும் அறிந்தவர்.

உண்மை மெதுவாகத்தான் வெல்லும்.

வாய்மையே வெல்லும்.

விமல் பொன்ராஜ் 

வியாழன், 9 ஜனவரி, 2025

தேஜோமயானந்தம் பாடல் 1 தாயுமானவர்

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்;
கரடிவெம் புலிவாயையும்
கட்டலாம்; ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்;
கட்செவி யெடுத்தாட்டலாம்;
வெந்தழலி னிரதம்வைத் தைந்துலே கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்;
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்
விண்ணவரை யேவல்கொளலாம்;
சந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொரு
சரீரத்தி ன்ம்புகுதலாம்;
சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்;
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
திறமரிது; சத்தாகியென்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
தெசோ மயானனந்தமே"!.

                              தாயுமான சுவாமிகள் 

 பறந்தோடும் குதிரையையும் பெரிய மதம் பிடித்த யானையையும் வசியப்படுத்தி தன்வசம் ஆக்கலாம்.

பசி மிகுந்த கரடி,புலி போன்றவை வாயைக் கட்டலாம்.

சிங்கத்தின் முதுகில் ஏறி சவாரி செய்யலாம்.

பாம்பை பிடித்து ஆட்டலாம்.

வேகும் நெருப்பிலே இரும்பைப் போட்டு தங்கமாக்கி விற்று உண்ணலாம்.

மற்றவர்கள் கண்களுக்கு தெரியாமல் எங்கும் உலாவலாம்.

தேவர்களை எல்லாம் வேலை வாங்கலாம்.

எப்பொழுதும் இளைமையோடு வாழலாம்.

மற்றொரு உடலில் புகுந்து விளையாடலாம்.

தண்ணீரில் நடக்கலாம், தீயில் குளிக்கலாம் எனக்கு நிகராக இந்த திறைமைகளைப் பெற்றவர்கள் யாராவது உண்டா உலகில் என்று கொக்கரிக்கலாம்.

ஆனால் பொழுதன்றைக்கும் சஞ்சலங்களும், சபலங்களும், சந்தேகங்களும் நிறைந்த இந்த மனதை திருப்தியாக வைத்துக் கொள்ள முடியாது.

மனதை ஆனந்தமாக வைத்துக் கொள்ள தெரிந்தவரே சிவானந்த சித்தர் ஆவார்.இந்த அறிவை எனக்கு வழங்கிய என் குருவாக இருந்து என்னை வழி நடத்தும் அறிவான தெய்வமே!
 என் தேஜோமயானந்த குருவே!.

சு.சிவா

செவ்வாய், 7 ஜனவரி, 2025

அகத்தியர் ஞானம் 1

 "சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்


சகல உயிர் சீவனுக்கு மதுதானாச்சு

புத்தியினால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்


பூதலத்தில் கோடியிலே ஒருவர் உண்டு

பத்தியினால் மனம் அடங்கி நிலையில் நிற்பார்


பாழிலே மனத்தை விடார் பரமஞானி :

சுத்தியே அலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம்


சுழியிலே நிலையறிந்தால் மோடசம் தானே!"

              அகத்தியர் பாடல்/ ஞானம் 1


இந்த பூமியில் கோடியில் ஒருவர்தான்  சகல உயிர்களுக்கும் தெய்வமாக நின்று அருளை வழங்குவது பராபரமே என்று புத்தியினால் அறிந்து மனம் அடங்கி மிகவும் தன்மையான புண்ணிய ஆத்மாவாக விளங்குவார்கள்.


 இன்று அலங்காரமாவும் காலப்போக்கில் பாழாகிவிடும் என்கிற எந்த விதமான ஜடப் பொருட்கள் மீதும் விருப்பு, வெறுப்பு அற்ற நிலையில் இருப்பவர் ஞானி!.


இன்னொன்றையும் வெளிப்படையாக சொல்கிறேன் குருநாதர் ஆசியால் நீ பெற்றுக்கொண்ட சுழுமுனை பயிற்சியில் சீராக ஈடுபட்டு அதன் நிலையையும் அது தரும் அனுபவப் பலன்களையும் அறிந்து கொள்வாயானால் அதுவே மோட்சம் பெறும் பாதை ஆகும்.


சு.சிவா

நிறுவனர்,தலைவர் 

தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை 

ஒழுக்கம்

 "ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு"

                                        குறள் 21.


எங்கும் மோகம், எதிலும் மோகம் என்று அழைந்து திரியாமல்!.


மனித வாழ்கைக்கு மிஞ்சிய பேராசைகளை புலன்கள் உருவாக்கத் தான் செய்யும் அப்படியே  விட்டால் நாளடைவில் மோகத்தீயாகவே மாறும் எப்படியாவது நினைத்ததை அடைந்திட அலையும். அவ்வாறு பேராசைகளால் உருவாகும் பற்றுக்களை எல்லாம்   நீக்கிக் கொண்டு  தனது வாழ்க்கையில்  தள்ள வேண்டியதைத் தள்ளியும், கொள்ள வேண்டியதைக் கொண்டும் நிர்வாகத் திறைமையோடு ஒருவர் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வாரானால் அவரையே ஒழுக்கமானவர் என்று துணிந்து அறிஞர்கள் உலகம் பாராட்டி மகிழும்.


செய்யும் தொழிலில் திறம்பட செயல்பட்டு ஒழுக்கமுடன் வாழ்ந்திட மற்றொரு குறள் மூலமாக 

வள்ளுவரே வழியும் காட்டுகிறார் .


பற்றுக பற்றற்றான் பற்றினைப் பற்றிஅப் பற்றை விடற்க்கு.


ஒழுக்கமாகத் தொழில் புரிந்து இல்லறத்தை நல்லறமாகக் கொண்டு தன்முனைப்பு சிறிதுமின்றி வாழும் பற்றற்ற ஞானிகள் இன்றும் இப்புவியில் வாழ்ந்து வருகின்றனர் அப்படியான மெய்ஞான குருவிடம் சரணடைந்து மெய்ஞான கல்வியை கற்றுக் கொண்டு நீங்களும் அறிஞர்கள் புகழும்படி வாழுங்கள்.


சு.சிவா

நிறுவனர், தலைவர் 

தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை 


ஞாயிறு, 5 ஜனவரி, 2025

திருக்குறள்

 "ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு"

                                        குறள் 21.


எங்கும் மோகம், எதிலும் மோகம் என்று அழைந்து திரியாமல்!.


மனித வாழ்கைக்கு மிஞ்சிய பேராசைகளை புலன்கள் உருவாக்கத் தான் செய்யும் அப்படியே  விட்டால் நாளடைவில் மோகத்தீயாகவே மாறும் எப்படியாவது நினைத்ததை அடைந்திட அலையும். அவ்வாறு பேராசைகளால் உருவாகும் பற்றுக்களை எல்லாம்   நீக்கிக் கொண்டு  தனது வாழ்க்கையில்  தள்ள வேண்டியதைத் தள்ளியும், கொள்ள வேண்டியதைக் கொண்டும் நிர்வாகத் திறைமையோடு ஒருவர் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வாரானால் அவரையே ஒழுக்கமானவர் என்று துணிந்து அறிஞர்கள் உலகம் பாராட்டி மகிழும்.


செய்யும் தொழிலில் திறம்பட செயல்பட்டு ஒழுக்கமுடன் வாழ்ந்திட மற்றொரு குறள் மூலமாக 

வள்ளுவரே வழியும் காட்டுகிறார் .


பற்றுக பற்றற்றான் பற்றினைப் பற்றிஅப் பற்றை விடற்க்கு.


ஒழுக்கமாகத் தொழில் புரிந்து இல்லறத்தை நல்லறமாகக் கொண்டு தன்முனைப்பு சிறிதுமின்றி வாழும் பற்றற்ற ஞானிகள் இன்றும் இப்புவியில் வாழ்ந்து வருகின்றனர் அப்படியான மெய்ஞான குருவிடம் சரணடைந்து மெய்ஞான கல்வியை கற்றுக் கொண்டு நீங்களும் அறிஞர்கள் புகழும்படி வாழுங்கள்.


சு.சிவா

நிறுவனர், தலைவர் 

தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை 


காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...