தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை தாயுமானவர் அருளிய ஞான மார்க்கத்தை மக்களிடையே பரப்பும் உயர்ந்த நோக்குடன் 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தாயுமானவர் கூறிய பராபர ஞானம், அன்பே சிவம் எனும் தத்துவம், மனிதன் தன்னை அறியும் ஆன்மீகப் பாதை ஆகியவற்றை எளிய தமிழில் எடுத்துரைப்பதே எமது முதன்மை இலக்கு. இந்த ஞான சபை, சாதி, மதம், இன வேறுபாடுகள் இன்றி அனைத்து உயிர்களையும் ஒரே இறை உணர்வில் இணைக்கும் ஒரு ஆன்மீகத் தளமாக செயல்படுகிறது.
வியாழன், 11 டிசம்பர், 2025
உச்சி பயிற்சி
புருவமத்தி பயிற்சி
புதன், 10 டிசம்பர், 2025
காகபுசுண்டர் ஞானம் பாடல் 8
வாறான பிரமத்தில் நடுவே மைந்தா!
வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிக்
கூறாகப் பின்னியடா கீழே பாயுங்
கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு;
வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே
வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இருகண்ணிற் பின்ன லாகி
நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே.
காகபுசுண்டர் ஞானம் பாடல் 8
விளக்கம்
மைந்தா! அண்டத்தின் (பிரம்மாண்டத்தின்) நடுப்பகுதியில் (சஹஸ்ராரம் அல்லது உச்சி முனையில்) நீ வாசியோகப் பயிற்சியில் ஈடுபட்டு வரும்போது, சூரியகலை (பிங்கலை நாடி), சந்திரகலை (இடை நாடி) ஆகிய இரண்டும் ஒன்றுசேர்ந்து அக்னிகலை (சுழுமுனை நாடி) ஆகி, மூன்று ஒளிகளாக (சூரிய-சந்திர-அக்னி) இணைந்து, நரம்புகள் அனைத்தையும் ஜடை (விழுது) போலப் பின்னிக்கொண்டு கீழ்நோக்கிப் பாயும். இவ்வாறு உன் இரு கண்களிலும் அந்த ஒளி வந்து பாயும். அதனால் உன் கண்கள் மிகுந்த ஆற்றல் மிக்கவையாகவும், தெய்வீக ஒளி நிறைந்தவையாகவும் ஆகும். அப்போது அண்டங்கள், பிரம்மாண்டங்கள் உள்ளிட்ட அனைத்துலகங்களையும் உன் ஒளிபொருந்திய கண்களால் தெளிவாகக் காண முடியும்.
இப்பாடல் குண்டலினி யோகத்தில் சுழுமுனை வழியாக பிராணன் இறங்கி கண்களில் ஒளியை நிரப்பி, திவ்ய திருஷ்டி (தெய்வீகப் பார்வை) அளிக்கும் ரகசியத்தை விளக்குகிறது.
சி எஸ் சிவா
காகபுசுண்டர் ஞானம் பாடல் 7
காகபுசுண்டர் ஞானம் பாடல் 6
காகபுசுண்டர் ஞானம் பாடல் 5
காகபுசுண்டர் ஞானம் 4
"காணப்பா தலமெல்லாம் அண்ட வுச்சி
கமலமடா பதினெட்டாங் கோட்டிற் சென்று
பூணப்பா மனத்தையுந்தான் பிசகொட் டாமற்
பூட்டடா பிரமத்திற் புகுந்தெந் நாளும்
வீணப்பா மந்திரங்க ளொன்று மில்லை
விதியில்லை மதியில்லை கெதியு மில்லை
தோணப்பா தோணுமடா மனமொன் றான
சுத்தமுடன் நீயிருந்து தவஞ்செய் வாயே"!
காகபுசுண்டர் ஞானம் 4
பல்வேறு உலகியல் சார்ந்த இன்ப துன்பங்கள் உன்னை சூழும் இருந்தாலும் விடாமல் குரு உனக்கு அருளிய ஞான பயிற்சிகளை சிரத்தையுடன் செய்து உறுதியுடன் நில்!
பதினெட்டு முடிச்சுகளையும் கடந்து தாமரை இதழ்களை ஒத்த பிரம்மரந்திரம் என்று கூறப்படும் அண்ட உச்சியே காணுகின்ற கோயில்களுக்கு எல்லாம் அடிப்படையாக விளங்குகிறது.
இந்த பயிற்சி செய்வதற்கு மந்திரம் என்றோ,விதி,மதி என்றோ மயங்கி நிற்காதே! நல்ல கதி தரும் வழியில் தான் நீ பயணிக்கிறாய்! அதனால் மனமொன்றிய தவத்தில் ஈடுபடுவாயாக! சுத்தசிவம் அருளால் சுந்தரனாகத் திகழ்வாய்!.
சு.சிவா
நிறுவனர், தலைவர்
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை
காகபுஜண்டர் ஞானம் பாடல் 15
காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...
-
பூநிலாயவைந்துமாய்ப் புணற்கண் நின்றநான்குமாய் தீநிலாயமூன்றுமாய்ச் சிறந்தகாலிரண்டுமாய் மீநிலாயதொன்றுமாகி வேறுவேறு தன்மையாய் நீநிலாயவண்ண நி...
-
தாயுமானவர் அருளிய “பராபரக்கண்ணி” விளக்கவுரை: சி எஸ் சிவா 1. பாடல் சீராருந் தெய்வத் திருவருளாம் பூமிமுதல் பாராதி யாண்ட பதியே பராபரமே. உரை:...
-
இதோ உனக்காக மூன்று அழகிய தமிழ் மணம் மாறாத ஞானக் கதைகள்… ஒவ்வொன்றும் ஒரு சிறு விளக்குடன்: மூன்று கற்கள் (எண்ணம் – சொல் – செயல்) ஒரு கிராமத்...