"உள்ளம் பெருங் கோயில்; ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே".
திருமந்திரம்
விளக்கம்
உள்ளம் என்பதே கோமான் (அரசர் அல்லது ஆண்டவர்) வசிக்கும் இடம் ஆகும்.
உள்ளத்தில் ஆண்டவர் குடியமர்ந்தவுடன் உடலை அவர் லயமாக்குவார்.
லயமாகும் உடலும் ஆண்டவர் வயமாகும்.
குடத்தின் வாய் திறந்து இருப்பதால் தண்ணீரை நாம் நிரப்பி கொள்வது போல்,உடலெனும் கடத்தின் வாய் திறக்க திருவடி தீட்சை அளிப்பார்கள். கடத்தின் வாயில் திறந்த பின்னர் ஞான உபதேசத்தால் தெளிந்த ஞானியாக்கி ஞான யோகத்தில் நிலைக்கவைத்து.
ஜீவ நீரை வாயு வடிவில் பெற்று ஆன்ம லிங்கம் ஆக அது உருமாறிட வைத்து ஞான வள்ளலாகவே விளங்கிடச் செய்வார் ஆண்டவர்.
இந்த மாதிரியான நடவடிக்கைகள் உள்ளம் முதல் தொடங்கி உடல் வரை நடைபெற்று வருவதால் பல்வேறு காரியங்களைச் செய்ய கட்டாயப் படுத்தும் புலன்கள் அதன் வீரியத்தை குறைத்துக் கொள்ளும் அந்த ஞானியின் மனதில் ஏதோவொரு வேளையில்
ஏதோவொரு விருப்பம் ஏற்படுமேயானால் உடனே நிறைவேற்ற பாடுபடும் அளவிற்கு மட்டுமே புலன்கள் வேலை செய்து அனுபவித்து ஞானத்தோடு ஒடுங்கி ஞான ஒளி வீசி நிற்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக