"பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே".
அபிராமி அந்தாதி பாடல் 5
அம்மையாகவும் இருந்து இறைவன் செய்யும் மூன்று பணிகள் பற்றிய உரையே முப்புரை!!
1. தாயின் முலையில் பால் வெகுவாக சுரந்து தானாகவே சொரிவது போன்று குருவாக என் முன்னே தோன்றி ஞான உரையாடல் செய்கிறாய் நீயே தாயே!!!.
2. மனம் உன் மணியில் நின்று செயலாற்றுகிறது என்று கண்மணியே என்னை உணரவைத் தாயே!!!
3. துரியாதீத நிலையில் ஒருவன் நிலையாய் நின்று விளங்கும் போது அச்சீவனது உடலில் அமிர்த உற்பத்திக்கு என்று ஒரு கடைதல் நிகழ்ந்து அமிர்தம் மேலேற பின்னரே தொடர்ந்து கழிவாகிய விஷமும் ஏற அதைத் தடுத்தாட்கொண்டு அருள்புரியும் அம் மா எனது பெரும் துணையே!
அனைத்திலும் உயர்வானதையே எனக்கு அருள்கின்ற பேரழகியே!
வான்காந்த ஈர்ப்பே உன்னை நான் என் தலையில் சுமக்கிறேன் அம்மா அபிராமி!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக