"சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
சகல உயிர் சீவனுக்கு மதுதானாச்சு
புத்தியினால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்
பூதலத்தில் கோடியிலே ஒருவர் உண்டு
பத்தியினால் மனம் அடங்கி நிலையில் நிற்பார்
பாழிலே மனத்தை விடார் பரமஞானி :
சுத்தியே அலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம்
சுழியிலே நிலையறிந்தால் மோடசம் தானே!"
அகத்தியர் பாடல்/ ஞானம் 1
இந்த பூமியில் கோடியில் ஒருவர்தான் சகல உயிர்களுக்கும் தெய்வமாக நின்று அருளை வழங்குவது பராபரமே என்று புத்தியினால் அறிந்து மனம் அடங்கி மிகவும் தன்மையான புண்ணிய ஆத்மாவாக விளங்குவார்கள்.
இன்று அலங்காரமாவும் காலப்போக்கில் பாழாகிவிடும் என்கிற எந்த விதமான ஜடப் பொருட்கள் மீதும் விருப்பு, வெறுப்பு அற்ற நிலையில் இருப்பவர் ஞானி!.
இன்னொன்றையும் வெளிப்படையாக சொல்கிறேன் குருநாதர் ஆசியால் நீ பெற்றுக்கொண்ட சுழுமுனை பயிற்சியில் சீராக ஈடுபட்டு அதன் நிலையையும் அது தரும் அனுபவப் பலன்களையும் அறிந்து கொள்வாயானால் அதுவே மோட்சம் பெறும் பாதை ஆகும்.
சு.சிவா
நிறுவனர்,தலைவர்
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை
குருவே சரணம்
பதிலளிநீக்குஆகட்டும்
பதிலளிநீக்கு