ஞானப் பாடல் – யோக உபதேசம்
என்னை இந்த உலகில்
தானே வாழ்கிறான் என்று சொல்வார்கள்.
இவன் இந்த நாடு தானே,
இந்த மாநிலம் தானே,
இந்த மாவட்டம் தானே,
இந்த ஊர் தானே என்று
அளவிடுவார்கள்.
இவன் இந்த ஜாதி தானே,
இந்த குடும்பம் தானே,
இந்த தாய்–தந்தையர் மகன் தானே,
இவர்களின் சகோதரன் தானே,
இவரின் கணவன் தானே,
இவர்களின் தகப்பன் தானே,
இந்தத் தொழில் செய்பவன் தானே என்று
பெயரும் பதவியும்
அடையாளங்களும்
அடுக்கு அடுக்காக
சுமத்திவைப்பார்கள்.
இவன் இப்படிப்பட்ட ஒருவன் தானே,
எனக்கு இவனைத் தெரியும் தானே என்று
பார்த்துவிட்டு
பேசிவிட்டு
போய்விடுவார்கள்.
அவர்கள்
பார்க்கட்டும்,
பேசிவிட்டு
போய்விடட்டும்.
ஆனால் நீ
அப்படி பார்த்துவிடாதே,
அப்படி பேசிவிடாதே.
ஞான யோகம்
பார்ப்பதில் அல்ல,
பார்ப்பவனை மறப்பதில்.
பேச்சில் அல்ல,
மௌனத்தில்.
கண்ணால் காண்பது
உருவத்தின் எல்லை;
உள்ளே உணர்வது
உண்மையின் வாசல்.
என்னால் தீட்சை பெற்ற நீ
என்னை ஒரு மனிதராக அல்ல,
ஒரு காற்றாக
ஏற்றுக்கொண்டால் போதும்.
காற்றுக்கு
பெயரும் இல்லை,
ஜாதியும் இல்லை;
ஆனால்
அது உயிர் கொடுக்கும்.
அதேபோல்
ஞானம் கற்பிக்கப்படுவதில்லை;
அது ஊற்றாக
உன்னுள்ளே
பாய்ந்து வரும்.
விளக்கு ஏற்றினால்
இருள் ஓடுவது போல,
அறிவு வந்தால்
அகந்தை விலகும்.
இதனை
நீ அப்படியே
ஏற்றாக வேண்டும் என்றில்லை.
மண் தயார் ஆனால்
விதை தானே முளைக்கும்.
மனம் பக்குவமானால்
ஞானம் தானே மலரும்.
ஏற்று வரமுடிந்தால்
இணைந்து வாழலாம் —
வாழ்வாங்கு.
நதியும் கடலும்
வேறல்ல என்பதுபோல்.
ஏற்காத நிலையில்
நீயாக வந்த வழியே
சென்று விடுவது
உனக்கும் நலம்,
எனக்கும் நலம்.
பூ மலர மறுத்தாலும்
மரம் கோபப்படுவதில்லை.
நான் கடைசியாக
கூறிய ரகசியம்
வார்த்தையில் இல்லை;
அனுபவத்தில் உள்ளது.
அது உனக்கு
கடைசியில் அல்ல —
காலம் வந்தால்
தானாகவே
தெரிய வரும்.
அன்புடன்,
சி எஸ் சிவா
நிறுவனர் தலைவர்
தாயுமானவர் ஞான சபை அறக்கட்டளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக