புதன், 10 டிசம்பர், 2025

குறள் 5

குறள் 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
விளக்கம் உரையாக!

இருவினை என்று சொல்வது
நல்லது–கெட்டது என்ற இரண்டு விளைவுகள்.
இவை மனம் குழம்பியிருக்கும்போது நம்மைத் தொடும்.
அறியாமை இருள் இருக்கும் வரை
இந்த இருவினை நம்மை தொடர்ந்து பிடித்துக் கொள்வது.

ஆனால்
மனத்தில் உள்ள ஒளி விழும் நேரம்
அறிவு தெளிவாகும் நேரம்—
அந்த நேரத்தில் கர்மத்தின் பிடி தானாகவே தளர்ந்து விடும்.

ஒளியை உணர்ந்த மனிதன்
நன்மை செய்தேன் என்ற பெருமையும் இல்லை;
தீமை செய்தேன் என்ற பயமும் இல்லை.
அவன் மனம் எளிமையாயும், தூய்மையாயும் இருக்கும்.

சித்தர்கள் சொல்வது:
“ஒளி வந்தால் இருள் ஓடும்.”
அதேபோல
உண்மை உணர்வு வந்தால்
நன்மை–தீமை இரண்டும் ஜீவனைத் தொட முடியாது.

இறைவனை உண்மையாக உணர்ந்தவன்
அவன் உள்ளம் சமநிலையிலும் அமைதியிலும் நிலை கொள்கிறது.
அங்கே இருள் வேலை செய்யாது;
கர்மத்துக்கும் இடமே இல்லை.

இதைத்தான் திருவள்ளுவர் எளிய சொல்லில் சொல்கிறார்—
“ஒளியை அடைந்தவரிடம்
இருள் சேர்ந்த இருவினை செல்வதே இல்லை.”

சி எஸ் சிவா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காகபுஜண்டர் ஞானம் பாடல் 24

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 24 பாடல் : தானென்ற பிரமத்தை யடுத் திடாமல்   தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும் ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும்...