புதன், 19 நவம்பர், 2025

தாயுமானவர் பாடல்

ஆனந்தமான பரம்;

கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்குமக்
      குணமொன்றும் ஒன்றிலேன்பால்
   கோரமெத் தனைபட்ச பாதமெத் தனைவன்
      குணங்களெத் தனைகொடியபாழ்ங்

கல்லாமை யெத்தனை யகந்தையெத் தனைமனக்
      கள்ளமெத் தனையுள்ளசற்
   காரியஞ் சொல்லிடினும் அறியாமை யெத்தனை
      கதிக்கென் றமைத்தஅருளில்

செல்லாமை யெத்தனைவிர் தாகோட்டி யென்னிலோ
      செல்வதெத் தனைமுயற்சி
   சிந்தையெத் தனைசலனம் இந்த்ரசா லம்போன்ற
      தேகத்தில் வாஞ்சைமுதலாய்

அல்லாமை யெத்தனை யமைத்தனை யுனக்கடிமை
      யானேன் இவைக்கும் ஆளோ
   அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
      ஆனந்த மானபரமே. 

தாயுமானவர் பாடல் 1.

 உலக வாழ்க்கையில் ஆன்ம விழிப்புணர்வு இன்றி வாழ்பவர்களுக்கு துன்பங்கள் எத்தனை எத்தனையோ உண்டு ஆனாலும் என் பராபரமே நீ என்னை அத்தனையில் இருந்தும் காத்து நின்று வழிநடத்தி வருகிறாய் அதனால் என்னுள் பேரானந்தமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

4.சின்மயானந்தகுரு ஆசிரிய விருத்தம்

 தாயுமான சுவாமிகள் அருளிய சின்மயானந்தகுரு பன்னிருசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாடல்:1 அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப அன்பினா லுருக...