வெள்ளி, 7 மார்ச், 2025

அபிராமி அந்தாதி பாடல் 11

"ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே".

          அபிராமி அந்தாதி பாடல் 11

 ஆனந்தமும் பேரறிவும் எனது இயல்பாகிட வான்காந்தமாகி நின்று அருள் புரிகிறாய் தாயே !

 வேதங்கள் அனைத்தும் உன் செந்தாமரை திருவடியையே போற்றுகிறது என்று கண்டு கொண்டேன்.

  திருநீற்று சாம்பல் காட்டில் திருநடமாடும் ஆடல்கலை நாயகனுடைய பெருமையை எங்களுக்கு உணர்தும் நாயகியே! 

                                           சி.எஸ்.சிவா
 

வியாழன், 6 மார்ச், 2025

அபிராமி அந்தாதி பாடல் 9

"கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே".

              அபிராமி அந்தாதி பாடல்.9.

 நாம் தவமியற்றி மாதவனாக  விளங்கும் போது அத்தவத்தின் விளைவாக விளைந்த ஞானச்சூட்டின் காரணமாக மூன்றாவது கண்னாகிய கருத்துக் கண் விழித்து முக்கண்ணனாகிய எம் தந்தை சிவபெருமான் நம்முள் காட்சியளிக்கிறார்.

 தாய்மையின் காரணமாக பெருத்து மேருமலையைப் போல காட்சி அளித்து பொங்கிப் பெருகி எப்படி தாய்ப்பாலானது வருமோ !
அதே போல் எனக்கு நீ அருளிய ஞான யோக தவத்தின் விளைவாக பேராணந்தம் என்னுடல் முழுவதும் பொங்கியது.ஆணந்தக் கண்ணீரும் தாரை தாரையாக வடிந்தது . அதைக் கண்டு நான் எங்கே பசியால் அழுகிறேனோ! என்று எண்ணி நீயும் ஞான அமுதப்பாலூட்டுகிறாய் தாயாகவும் இருந்து அபிராமித் தாயே!

கருணையால் கனம் பொருந்திய அமுதக் கலசமும், அதைப் படர்ந்து தொங்கும் ஆரமும்(மலர் மாலையும்) சிவந்த கையும்  (பண்பு பொருந்திய செம்மையான மனதின் கை) அப்போது பூத்த பூவின் அழகைப் போலவே இருக்கும் உன் அழகு முகம் .
இறைவா எனது அண்னை அபிராமியாகவே எனக்கு தினமும் காட்சி அளித்து என்னை உய்யச் செய்திடுவாய் தாயே! தாயுமானவரே!
 
                                                சி.எஸ்.சிவா சி

புதன், 5 மார்ச், 2025

திருமந்திரம்

"உள்ளம் பெருங் கோயில்; ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே".
                                      திருமந்திரம் 

விளக்கம் 

உள்ளம் என்பதே கோமான் (அரசர் அல்லது ஆண்டவர்) வசிக்கும் இடம் ஆகும்.

உள்ளத்தில் ஆண்டவர் குடியமர்ந்தவுடன் உடலை அவர் லயமாக்குவார்.
லயமாகும் உடலும் ஆண்டவர் வயமாகும்.

 குடத்தின் வாய் திறந்து இருப்பதால் தண்ணீரை நாம் நிரப்பி கொள்வது போல்,உடலெனும் கடத்தின் வாய் திறக்க திருவடி தீட்சை அளிப்பார்கள். கடத்தின் வாயில் திறந்த பின்னர் ஞான உபதேசத்தால் தெளிந்த ஞானியாக்கி ஞான யோகத்தில் நிலைக்கவைத்து.

ஜீவ நீரை வாயு வடிவில் பெற்று ஆன்ம லிங்கம் ஆக அது உருமாறிட வைத்து ஞான வள்ளலாகவே விளங்கிடச் செய்வார் ஆண்டவர்.

 இந்த மாதிரியான நடவடிக்கைகள் உள்ளம் முதல் தொடங்கி உடல் வரை நடைபெற்று வருவதால் பல்வேறு காரியங்களைச் செய்ய கட்டாயப் படுத்தும் புலன்கள் அதன் வீரியத்தை குறைத்துக் கொள்ளும் அந்த ஞானியின் மனதில் ஏதோவொரு வேளையில்
ஏதோவொரு விருப்பம் ஏற்படுமேயானால் உடனே நிறைவேற்ற பாடுபடும் அளவிற்கு மட்டுமே புலன்கள் வேலை செய்து அனுபவித்து ஞானத்தோடு ஒடுங்கி ஞான ஒளி வீசி நிற்கும்.

                              சிவா

அபிராமி அந்தாதி பாடல் 8

"சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவ".

                    அபிராமி அந்தாதி பாடல் 8

  நான்,எனது என்று அடையாளப்படுத்திக் கொண்டு பெற்றால் கொண்டாடுவதும், இழந்தால் திண்டாடுவதுமாக  பாசி படிந்த நிலையில் இருந்த என்னுள் இருந்த எண்ணற்ற கவலைகளை புளியிட்டு விளக்கி பாச விணைகளகற்றி பூரண சுதந்திரம் ஆக்கினாள் .  எனது தந்தை சிவனின் சக்தியான அழகபிராமித் தாய்!

 மகிஷாசுரன் எனும் அரக்கன் ஆணவ மீறலில் தொடர்ந்து ஈடுபட்டதால் அன்னை கோபம் கொண்டு கோர வேஷம் தரித்து அளித்தாள் அந்தரி.

 நீல நிற ஆகாய பூதமாக விளங்கும் விண் ஆற்றலானவள்.பூமியில் அனைவரையும் பெற்றவள் அவளே ஆனாலும் அன்னை அழுக்கடையவே இல்லை.
கன்னித்தன்மை அழியாமல்  விளங்குவாள் என் தாய் நீலநிற ஆகாய அபிராமி!

 குண்டலியை வென்று வாகை சூடி நிற்கும் சிவனின் துணை நீயே!

 அம்மா ஆற்றலரசியே உனது திருவுளம் கனிந்து அருள்புரிந்து எனது மலர்த்தாளைத் திறந்து .
நான் நித்தமும் உனது மலர்த்தாளைத் தரிசனம் செய்ய அருள்வாயே!அபிராமித்தாயே!

                                              சி.எஸ்.சிவா

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...