திருமந்திரம்
"எய்திய நாளில் இளமை கழியாமை
எய்தியநாளில்இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இருந்து கண்டேனே !"
விளக்கவுரை :
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அந்த பிறப்பிலும் இளமைக்காலம் மிக அரிது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.கிழப்பருவம் எய்தியவுடன் இறைவனைத் தேடலாம் என்று தினவெடுத்து நின்றால் முடிவில் ஏக்கம் மட்டுமே மிஞ்சும்.
இளமைக் காலமே இறைவனைத் தேடியடைய இசைவான காலம்.
திரு விவிலியம் கூட இதை இவ்வாறு கூறுகின்றது : உன் வாலிபப் பிராயத்திலேயே உன் சிருஷ்டிகரை நினை என்று.
நீங்கள் ஏற்றுக் கொண்டு வந்து இங்கு வாழ்ந்து வருகின்ற இந்த மானிடப் பிறப்பில் உங்கள் உடலில் இளமை குடிகொண்டிருக்கும் போதே !இறைவனைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று விழிப்பூட்கிறேன்.
விழிப்பூட்டை திறந்து கொள்ளுங்கள் உங்கள் ஆசான் மூலமாக!
இறை உணர்வோடு நீங்கள் வாழ்வதற்கு தடையாய் எவையெல்லாம் இருக்கிறதோ அவற்றை எல்லாம் தூர எட்டி வீசுங்கள். மன மயக்கத்தை நீக்கிக் கொள்ளுங்கள் .
யானும் எனது இளமை காலத்திலேயே பரமனோடு ஒன்றிடவும் மனம் பக்குவ நிலையை எய்திடவும் தடைகளாக இருந்த மன மாசுக்களை நீக்கிக் கொண்டேன்.பரமானந்த நிலை பெற்றேன்.இறையொளியோடு கூடி கலந்தேன்.
குருநாதர்களுக்கு எல்லாம் குருநாதர் திருமூலர் நமக்கு வாக்கு தருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக