சனி, 4 ஜனவரி, 2025

திருமந்திரம்

 வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்

அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்

எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை

கல்லா தவர்கள் கலப்பறி யாரே.


                             திருமந்திரம் பாடல் 24.


  கல்வி , கேள்விகளில் வல்லவர்கள் மெய்வழிக் கல்வியை கற்றுக் கொண்டு  துணிவுடன் வாழ்கையை எதிர்கொண்டு உயர்வர். 


மெய்வழிக் கல்வியை அறியாதவர்கள் மெய்ந்நெறியைப் பலவாகக்கண்டு தடுமாற்றம் எய்தி ஒன்றினும் நில்லாது தாழ்ந்தவராவர். 


அதனால் நமது சிவபெருமான் எங்கும் நிறைந்து நிற்பினும்; ஏன் தன்னுள்ளே இறைவன் இருப்பினும்! மெய்ஞான கல்வியை கல்லாதவர்கள் அவனை(சிவப்பரம் பொருளை) அடையும் நெறியை உணரவேமாட்டார்கள்.

2 கருத்துகள்:

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...