சனி, 19 ஏப்ரல், 2025

அபிராமி அந்தாதி பாடல் 12

"கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே".

               அபிராமி அந்தாதி பாடல் 12

 கண் நீ அதன் மூலமாக உன் புகழை கற்றறிந்து கொண்டேன் மணிவாசகம் புரிந்தது.
 உன் இருபாதங்களாலும்.அதைவைத்தே இரவுபகலற்ற இடத்தின் தரிசனம் பெற்றேன்.

 உன்னை எத்தனையோ பேர் பெருமை செய்து வணங்கி வருகிறார்கள்.அப்படியான அறிவு, பக்தி சிறிதும் இல்லாத அடியேனுக்கு நீ வழங்கி அருள்கின்ற ஞானப் பயிற்சிகள் யாவும் கிடைக்கப் பெற்று நான் உயர்வடைய உதவுவது நான் எந்த முற்பிறப்பில் செய்த புண்ணியமோ!ஏழு சக்கரங்கள் மூலமாக சக்தி களமாக பூத்து குலுங்கும் என் அம்மா தாயே!

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

அபிராமி அந்தாதி பாடல் 10

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

அபிராமி அந்தாதி பாடல் 10

நிற்கும் போதும், இருக்கின்ற போதும் நடக்கும் போதும்,
கிடையில் நான் படுக்கையிலும், இறையே உனையடைய எனக்கு  உன்னால் வாழையடி வாழையாக தொடர்ந்து சித்தர்கள் மூலமாக கிடைத்த அருட்பயிற்சிகளில் இருந்து நான் நலுவதுதில்லை உன் நினைவே என் நினைவு எப்போதும்.

என்றும் எமதுள்ளம் உன் மலரடித்தாளை வணங்கிய படியே இருக்கிறது.

வேதங்களினாலும் உன்னை முழுமையாக குறிப்பாக இதுதான், இப்படித்தான் என்று குறிப்பிட்டு எழுதமுடியவில்லை.மனமடங்கி நிற்கத் தெரிந்த மனிதர்கள் உள்ளத்தில் ஒன்றி நடம் ஆடுகின்ற பேரருளே அவர்களுக்கே உனதருளால் எல்லா மறைகளையும் முழுமையாக வெட்டவெளிப்படையாக்குகிறாய்.

உமா தேவியே அன்றும் நீ இமயத்தில் பிறந்தாய், இன்றும் நீ என் இமயத்தில் (இமயம் என்பது இமைகளில் தொடர்ந்து மேம்பட்ட பகுதிகளை குறிக்கிறது) பிறந்துவிட்டால் நானும் பூ, பிஞ்சு ,காய் போன்ற நிலைகளில் அழிந்து விடாமல் முழுவதுமாக கனிந்து ஞானப் பழமாகி விடுவேன்  அருள்புரிவாயாக அன்னையே!

பொருள் விளக்கம் 
சு.சிவா

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

காகபுசுண்டர் 1

சிறந்தபரா பரமாகி யெங்குந் தானாய்த்
      தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிப்
பறந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
      பல்லாயிரங் கோடி அண்டம் படைத்த போதம்
வரம்பெருகி யனந்தனந்தம் உயிரு மாகி
      மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
      சச்சிதா னந்தமதைப் பணிகு வோமே.

காகபுசுண்டர் 1

எல்லாவற்றிலும் மிகச் சிறந்தது பராபரமே ஆகும்.

அதுவே சூரிய, சந்திர அக்கினியாக  பரந்து விரிந்து நின்று அருள்கிறது.

ஐம்பூதங்கள்; ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம்.

 பராபரத்தின் துணையோடு மறைந்து நின்று விளங்குகின்ற மகா சக்தி என்றும் அறிஞர்களால் போற்றப்படும் மாயா சக்தியே பல்லாயிரம் கோடி அண்டங்களைப் படைத்து சீரமைப்புடன் இயக்கி வருகிறது.

 அம்மாயா சக்தியே அதே ஐம்பூதங்களைக் கொண்டு உயிர்களையும் படைத்தருளுகிறது.

 அதே மாயா சக்தி தான் ஒரே இறைவனை வணங்கும் முறையைக் கூட பல்வேறு வடிவத்தில் உள்ள சமய வேற்றுமை கொண்டு நம்மை வணங்கிடச் செய்கிறது.

 பிராணன் எனப்படும் உயிர்க்காற்று நம்மில் பெருக வேண்டும்.

 மாயா சக்திக்கும் நாயகனாக விளங்குகின்ற எம்பிரானே எங்கும், எப்போதும் உண்மையான ஆனந்தத்தை தருகிறார். என்பதை உணர்ந்து ,புரிந்து கொண்டு அந்த சச்சிதானந்தப் பெருங்கடவுளையே பேதமையை நீக்கிக் கொண்டு ஒற்றுமை உணர்வுடன் என்றும் வணங்கி மகிழ்வோமாக!.

 சி.எஸ்.சிவா

காகபுஜண்டர் ஞானம் பாடல் 15

காகபுஜண்டர் ஞானம் – பாடல் 15 பாடல் : முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது   மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும் சத்தியடா மனந்தானே யேக மாகத் ...